சீனாவில் உள்ள ஒரு ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹாட்பாட் குளியல் முறை இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹாட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது.
அதில் ஒரு பிரிவு சிவப்பாகவும், மற்றொரு பிரிவு வெள்ளை நிறத்திலும் உள்ளது. அந்தத் தொட்டியில் சிவப்புப் பக்கமுள்ள தண்ணீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன.
இதே போல வெள்ளை பக்கமுள்ள பிரிவில் பால், சிவப்பு பேரீச்சம்பழம், பெர்ரி பழங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது போன்ற சூடான சூப் போன்ற குளங்களில் பொதுமக்கள் மூழ்கி எழும்போது அவர்களுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது எனச் சீனர்கள் நம்புகின்றனர்.
தற்போது இது போன்ற ஹாட்பாட் குளியலை மேற்கொள்ளச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தக் குளியலுக்கு ரிசார்ட் நிறுவனத்தின் சார்பில் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சீனாவின் ஹாட்பாட் குளியல் முறை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
















