ஹைதராபாத் அருகே அரசு பேருந்தும், ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மிரியாலகுடா அருகே ஹைதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தின் பாதி பகுதி நசுங்கியதால் ஓட்டுநர் உட்பட 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















