டொமினிகன் குடியரசு கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
பராஹோனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
அத்தியாவசிய பொருட்களை வாங்குதற்கு வெளியே செல்ல முடியாத சூழல் நீடிப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
















