சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் இருந்து பவானி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு இரு மார்க்கமாகத் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து சங்ககிரி, சேலம் செல்லும் தனியார் பேருந்துகள் வைகுந்தம், காளிப்பட்டி பிரிவில் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 6 தனியார் பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என ஓட்டுநர், நடத்துநருக்கு அறிவுறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















