சீனாவில் லிப்ட் பழுதாகி நின்றபோது பெண்ணையும், அவரது குழந்தையையும் இளைஞர் ஒருவர் தற்காத்து நின்ற காட்சி வைரலாகி உள்ளது.
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிப்டில் கைக்குழந்தையுடன் பெண் மற்றும் இளைஞர் சென்றனர். அப்போது திடீரென லிப்ட் பழுதாகி அதிர்ந்தது.
இதையடுத்து தாயையும், குழந்தையையும் லிப்டில் இருந்த இளைஞர் தற்காத்து நின்றார். பின்னர் லிப்டில் பட்டன்களை அழுத்திக் கைக்குழந்தையுடன் இருந்த அந்தப் பெண் வெளியேற இளைஞர் உதவி செய்தார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் இளைஞரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
















