கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜராகி உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள் முன்பு இதுவரை சம்மன் பெற்ற 15-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி இருந்தனர்.
இந்நிலையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3-வது நாளாக வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நகை அடகு கடை, எலக்ட்ரிகல் ஷாப், பேக்கரி, தனியார் இ சேவை மையம், மருந்துக் கடை உரிமையாளர்கள் என 5 பேர் ஆஜராகி உள்ளனர். விசாரணைக்கு இன்று மேலும் சிலர் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
















