கரீபியனில் அமெரிக்கா போர் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகிப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாக டிரப்ம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரை கைது செய்ய உதவுவோருக்கு இந்திய மதிப்பில் 415 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறி டிரம்ப் பரபரப்பை கிளப்பியிருந்தார்.
போதைப்பொருள் மற்றும் கடத்தல் பயங்கரவாதிகளை ஒழிப்போம் என்று கூறி கரீபியன், பசிபிக் கடற்பகுதியில் சிறிய படகுகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாகக் கூறி, வெனிசுலா அருகே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் மைய பகுதியான கரீபியனில் அமெரிக்கா போர் பயிற்சி மேற்கொண்டது.
விமானப்படை, கடற்படை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து வீரர்களைக் கொண்டு இந்த போர் பயிற்சி நடத்தப்பட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
















