இந்திய வம்சாவளி இளைஞர்கள் உள்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 நண்பர்கள் ஸ்டார்ட்அப் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸில் உள்ள பள்ளியில் சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் ஆகிய இரு இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரென்டன் பூடி பயின்று வந்தனர்.
இவர்கள் மூவரும் இணைந்து மெர்கோர் என்ற ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம், அண்மையில் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதன்மூலம் நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
















