கோஹினூர் வைரம் உள்ளிட்டவற்றை இந்தியாவிலிருந்து கொள்ளையடித்ததாகப் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளிடம் கேரளாவைச் சேர்ந்த பெண் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து பல்வேறு பொக்கிஷங்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்தச் சுற்றுலாபயணி வெளியிட்ட வீடியோவில், புதையல், கருப்பு மிளகு எனப் பலவற்றை கொள்ளையடித்ததாகப் பெண் கூறினார். கோஹினூர் வைரத்தைத் தங்களிடமே திருப்பி தருமாறும் தெரிவித்தார்.
















