ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இண்டிக் கூட்டணியின் மூன்று குரங்குகள் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கேவட்டி சட்டமன்றத் தொகுதியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மகாத்மா காந்தியின் 3 குரங்குகள் தீயவற்றைப் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருந்தன. ஆனால், இப்போது ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இண்டிக் கூட்டணியின் மூன்று குரங்குகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்ல பணிகளைப் பார்க்கவும், கேட்கவும், பேசவும் இந்த மூன்று புதிய குரங்குகளால் முடியவில்லை என்றும் அவர் சாடினார்.
















