ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த குப்பன் மற்றும் அவரது மனைவி ரங்கம்மாள் ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கி உள்ளனர்.
மாதம் 6 ஆயிரம் ரூபாய் கட்டி வந்த நிலையில, பணத்தைத் திரும்ப கேட்டுப் பிரகாஷ் கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
தங்களால் உடனடியாகப் பணத்தை கொடுக்க முடியாது எனக் குப்பன் கூறிய நிலையில், அவருக்குச் சொந்தமான ஒன்றரைச் சென்ட் நிலத்தை கேட்டுப் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி, மகன் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த குப்பன் மற்றும் அவரது மனைவி ரங்கம்மாள் ஆகியோர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















