ஏர் இந்தியா விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்த நிலையில், நான் ஒருவன் மட்டுமே தப்பினாலும், உடல், மன ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக விஸ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவரளித்த பேட்டியில், தனது கால், தோள்பட்டை, முழங்கால் மற்றும் முதுகில் தொடர்ந்து வலி ஏற்படுவதால் அவதி அடைந்து வருவதாகவும், தன்னால் எந்த வேலையும் செய்யவோ, வாகனம் ஓட்டவோ முடியவில்லை எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், தங்களது குடும்பத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த சகோதரரை இழந்து தவிப்பதாகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
















