நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி ஒருவர் தனது 2 மாற்றத்திறனாளி குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இதனிடையே, கடையை அவரது சகோதரர் கடையை அபகரிக்க முயன்றதாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாலாஜியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி மற்றும் அவரது மனைவியைக் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கடையை நடத்தி கொள்ளலாம் எனக் கூறி உதவி ஆய்வாளர் ஜெயபால் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், தங்களது 2 மாற்றத்திறனாளி குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் ஜெயபால் தங்களைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தங்களால் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















