சபரிமலைக் கோயில் கருவறைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத்தகடுகள் பராமரிப்பு பணிக்காகக் கழற்றப்பட்டன.
அவை மீண்டும் ஒப்படைக்கப்பட்ட போது 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்திருந்தது.
இதுகுறித்துச் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையின் பேரில், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி உட்பட மூவரைப் போலீசார் கைது செய்தனர்.
துவாரப் பாலகர் சிலைகளின் பீடங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
			















