கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட சம்பா – தாளடி பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா – தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் சம்பா – தாளடி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், பருவம் தவறி பெய்த கனமழைக் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததாகவும், இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தற்போது பெய்த மழைக்கும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளதாகக் கூறிய விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
			















