சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கச்சுப்பள்ளி ஊராட்சியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின்னர், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
			















