திண்டுக்கல் மாவட்டம் ஒட்டநாகம்பட்டியில் முடிவெட்ட தாமதம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை, சலூன் கடைக்காரர் ஷேவிங் கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் படுகாயமடைந்த முனியப்பன் சிகிச்சைக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய சலூன் கடை உரிமையாளர் மோகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
			















