கோவைச் சம்பவம் மூலம் பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது எனவும், திமுக ஆட்சியில், பெண்கள், தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவியை வன்கொடுமைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தி, அரசு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
			















