கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பத்தில் தாக்கப்பட்ட இளைஞரைப் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கோவை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
கோவை விமான நிலையம் அருகே தனது ஆண் நண்பருடன் மாணவி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்தனர்.
இதில் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் மாணவியின் ஆண் நண்பரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இளைஞரைப் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நேரில் சென்று அவருக்கான சிகிச்சை மற்றும் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.
















