திமுக ஆட்சியில் தமிழகம் மோசமான நிலையில் உள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஈரோட்டில் பரப்புரையில் பேசியவர்,
”தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை என்றும் ஸ்டாலின் ஆட்சியில் மோசமான நிலையில் தமிழகம் உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
கஞ்சா போதையில் வந்த மூவர், பெண்ணைத் தாக்கி பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளனர் என்றும் கோவை மாநகரப் போலீசார் ரோந்து போகவில்லை என்று குற்றம் சாட்டியவர், பாதுகாப்பு கொடுப்போம் என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
















