திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவையில் இருந்து திருச்சியை நோக்கி பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.
பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் வந்தபோது, பேருந்தின் இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. இதனை அறிந்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகளை இறக்கியுள்ளார்.
பின்னர் மளமளவெனப் பற்றிய தீ, பேருந்து முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் பற்றிய தீயைப் போராடி அணைத்தனர்.
			















