2025 காரீப் பருவத்தில் நாடு முழுவதும் யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவில் கிடைப்பதை மத்திய அரசின் உரத்துறை உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், 2025 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் இந்தியா 58.62 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதியான 24.76 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை விட 2 மடங்கு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 17.50 லட்சம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட உள்ளது.
யூரியா உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், இந்தத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டவுடன் இந்தியாவின் இறக்குமதி சார்புநிலைக் கணிசமாகக் குறைந்து, யூரியா உற்பத்தியில் தன்னிறைவிற்கு வழிவகைச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
			















