உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தைப் புலி துரத்தியதால் அவர்கள் அச்சமடைந்தனர்.
இந்தியா-நேபாள எல்லையில் பிலிபித் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் ஜிப்ஸி வாகனத்தின் மூலம் புலிகள் காப்பகத்தைப் பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த புலி வாகனத்தின் மீது பாய்ந்தது.
இதனால் அச்சமடைந்த ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கினார். தொடர்ந்து புலி வாகனத்தைப் பின்னால் துரத்தியது. இதனால் வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
			















