அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில், பாத்திரம் கழுவும் வேலைக்காகச் சேர்ந்த இந்திய வம்சாவளி தற்போது அதே உணவகத்தின் 250 கிளைகளை தனதாக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
கோலி என்ற இந்திய வம்சாவளி இளைஞர், 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்தபோது, குறைந்தபட்ச ஊதியத்தில் அங்குள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்தார்.
தீவிர உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வணிக நுண்ணறிவு ஆகியவற்றின் மூலம், கோலி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, உணவகத்தின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு உயர்ந்தார்.
வேலைச் செய்துகொண்டே நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பட்டம் பெற்ற பின்னர், தான் பணிபுரிந்த நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கிய அவர், தற்போது 250 கிளைகளைச் சொந்தமாக்கியுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவில் வெற்றிகரமான இந்திய வம்சாவளித் தொழிலதிபர்களில் ஒருவராகக் கோலி திகழ்கிறார்.
















