பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு, நவம்பர் 6, 11 ஆகிய தினங்களில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நிறைவடைந்தது. NDA தலைவர் நிதீஷ் குமார், பாஜகவின் அமித் ஷா, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி போன்றோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
















