சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















