எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளதாகக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
“எந்தப் பெண்ணுக்கும் நடக்க கூடாத கொடூரம் நடந்துள்ளது” எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது என்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்கிறோம் என்றும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தரும் என நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது என்றும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்று தருவதும் காவல்துறையின் பொறுப்பு என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
















