பாமக தலைவர் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ராமதாஸ் ஆதரவாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருள், வாழப்பாடி அருகே காரில் சென்றபோது அன்புமணி ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர், ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் 7 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகச் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
தன் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அருள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
















