சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட புகாரில் அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளருமான அருள், நேற்று சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அன்புமணியின் ஆதரவாளர்கள், அருளின் காரை மறித்து அவரைத் தாக்கினர். இது தொடர்பாகப் பாமக எம்எல்ஏ அருள், சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்கள் ஜெயபிரகாஷ், சங்கர், தினேஷ் உட்பட 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் 6 பேரைப் போலீசார் கைது செய்தனர். இதனிடையே மோதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 5 அடிப்படைகளை அமைத்துச் சேலம் எஸ்பி கௌதம் உத்தரவிட்டுள்ளார்.
















