சென்னை தாம்பரத்தில் நுகர்வோர் செலுத்திய அபராத தொகையைக் கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முல்லைநகர் மின்வாரிய அலுவலகத்தில் ராஜா என்பவர் கணக்காளாராகப் பணியாற்றி வருகிறார்.
இவர், முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட காசோலையை தனது வங்கி கணக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற தணிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கணக்காளர் ராஜாவைப் பணியிடை நீக்கம் செய்து உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
















