அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர்.
அரசுக்குத் தேவையான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், நிதி விடுவிப்பு தடைபட்டு உள்ளது.
இதனால் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக ஊழியர்கள் விடுப்பில் சென்றதால், முக்கிய துறைகளின் சேவை ஸ்தம்பித்துள்ளது.
















