கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியை 3 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என ஆளும் திமுக அரசைப் பாஜக, அதிமுக, தவெக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















