பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டுமென அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல் துறையினரின் முன்னிலையிலேயே அருள் தலைமையிலான கும்பல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் அருளையும், அவரது கூட்டாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாலு வலியுறுத்தியுள்ளார்.
















