கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்லைக் கருப்பசாமி கோயில் திருவிளக்கு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு நடத்தினார்.
ஒன்னிப்பாளையம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான எல்லைக் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பெளர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தப் பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். தொடர்ந்து அவர், விளக்கேற்றிப் பூஜையைத் தொடங்கி வைத்தார். இதில் 10 ஆயிரத்து 8 பெண்கள் பங்கேற்று குத்து விளக்கேற்றிப் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வழிபாடு செய்வதாகத் தெரிவித்தார். மேலும் பெண்கள் சுதந்திரமாக நடமாட பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
















