சென்னையில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது.
சென்னை கோடம்பாக்கத்தில் விக் ஏற்றுமதி தொழில் நடத்தி வரும் வெங்கடேசன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து கோடம்பாக்கம், நெற்குன்றம் பகுதிகளில் உள்ள வெங்கடேசன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாகத்துறையினர் நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் முடிவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழிலதிபர் வெங்கடேசன் யாருடைய பினாமி, தலைமுடி ஏற்றுமதியில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது எப்படி என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















