சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தெருவில் அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவ்வழியாக வந்த தீயணைப்பு வாகனம் அங்குச் சிக்கிக் கொண்டது.
சிந்தாதிரிப்பேட்டையில் ரீதா என்பவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அப்போது ரிச்சி தெருவில் நடக்க முடியாத அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்குத் தீயணைப்பு வாகனத்தை இயக்க முடியாமல் ஓட்டுநர் அவதிக்கு உள்ளாகினர்.
இதனால் நீண்ட நேரத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
















