குருநானக் ஜெயந்தி விழாவை ஒட்டிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் குடும்பத்துடன் வழிபட்டார்.
சீக்கியர்களின் புனித விழாவான 556வது குருநானக் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான், அவரது மனைவி குர்பிரீத் கவுர் ஆகியோர் அமிர்தசரஸ் தங்க பொற்கோயில் வழிபட்டனர்.
இதேபோல் ஆயிரக்கணக்கான சீக்கியர்களும் அதிகாலையில் குளத்தில் புனித நீராடி வழிபட்டனர்.
















