கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குணா, சதீஷ், காளீஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் மருத்துவமனையில் வைத்து கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான் விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து 3 பேரையும் வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய பாதிக்கப்பட்ட மாணவியையும் கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
















