திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷங்கள் எழுப்பி தரிசித்தனர்.
















