அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 3-ம் தேதி அன்னாபிஷேக விழாவானது கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நடைபெற்ற விழாவில், பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் வடிக்கப்பட்டு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















