தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடந்த மனிதசங்கிலி போராட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்,
அப்போது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வேதனையை அளிப்பதாகவும் கூறினார்.
குற்றம் நடந்த பின் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டோம் என்பது வேதனையை தருகிறது என்றும், தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்றும் வாசன் குறிப்பிட்டார்.
















