நேபாளத்தில் ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து உருவான புதிய கட்சியின் சீன ஆதரவு கொள்கையால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இ
ந்தப் போராட்டம் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராகத் திரும்பியதுடன் வன்முறையும் வெடித்தது. வன்முறையால் பலர் கொல்லப்பட்ட நிலையில், பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா தலைமையில், ஒன்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்க உள்ளன.
சீன ஆதரவு கொள்கை உடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்திருப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
















