இந்திய ரயில்வேயின் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
ராஜஸ்தானின் கோட்டா ரயில்வே பிரிவில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வாய் மாதோபூர் – கோட்டா – நாக்டா ரயில் பாதையில் இயக்கப்பட்ட இந்த ரயில், ரோஹல்குர்த் மற்றும் லபான் நிலையங்களுக்கு இடையே மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியது.
ரயிலில் பயணிகள் இருப்பதை பிரதிபலிக்கும் வகையில் 800 டன் எடையுள்ள ரேக்குடன் கூடுதலாக 108 டன் எடை ஏற்றப்பட்டு, மொத்தம் 908 டன் சுமையுடன் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அதிவேகத்தில் ரயிலின் நிலைத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அதிர்வுச் சோதனைகள் மற்றும் ஈரமான தண்டவாளத்தில் அவசரகால பிரேக்கிங் சோதனைகள் போன்ற முக்கிய தொழில்நுட்ப சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதிக வேகத்தில் செல்லும்போது கூடச் சிறந்த நிலைத்தன்மை மற்றும் பயண வசதியை இந்த மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் உறுதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















