சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 83 தூய்மை பணியாளர்கள் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தூய்மை பணியாளர்கள், பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கடலில் இறங்கி போராடியவர்களை பத்திரமாக கரையில் சேர்த்தனர். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 83 தூய்மை பணியாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















