பீகாரில் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொண்டபோதும் பேசிக் கொள்ளாத காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பீகாரில் ராஸ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனராகவும், அதன் தலைவருமாகவும் இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருடைய மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ்.
இவரைக் கடந்த மே 25ம் தேதி கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி லாலு பிரசாத் உத்தரவிட்டார். இதனையடுத்து தேஜ் பிரதாப் கடந்த ஆகஸ்ட்டில் ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
அவரது கட்சி தற்போது நடைபெறும் பீகார் தேர்தலில் 22 இடங்களில் போட்டியிடுகிறது. இதனால் ஆர்ஜேடி சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவை எதிர்த்துத் தேஜ் பிரதாப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்டனர்.
இருப்பினும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி நலம் விசாரித்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், மரியாதை நிமித்தமாகக் கூடப் பேசிக் கொள்ளாத இண்டி கூட்டணியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவின் பண்பை விமர்சித்து வருகின்றனர்.
















