சென்னை கோட்டை ரயில் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த நபரைக் கொலை செய்துவிட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்ட குதிரை ஓட்டியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகரை சேர்ந்த அஸ்வத் பாஷா, எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி கோட்டை ரயில் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த அஸ்வத் பாஷாவை இருவர் வழிமறித்தனர்.
பின்னர், அவரை கொலை செய்துவிட்டு அவரது செல்போனை திருடிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மெரினா கடற்கறையில் குதிரை ஓட்டிவந்த சுரேஷ் என்பவர், தனது நண்பருடன் இணைந்து அஸ்வத் பாஷாவை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
















