திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு பகுதியில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துள்ள கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஊத்தங்கரையில் உள்ள பாம்பாற்றுக்கு செல்வதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
















