சீன அதிபரின் உதவியாளர்களைப் போலவே மிமிக்ரி செய்து அதிபர் டிரம்ப் வேடிக்கை காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மையில் தென்கொரியாவில் நடந்த ஆசியா – பசுபிக் உச்சிமாநாட்டில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து வர்த்தகம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து இரு நாடுகளும் பரஸ்பரம் வரி குறைப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சீன அதிபருடனான தனது சந்திப்புகுறித்து டிரம்ப் வெள்ளை மாளிகையில் கிண்டலாகப் பேசினார்.
அப்போது பேசிய டிரம்ப், சீன அதிபருக்குப் பின்னால் முறைத்துக் கொண்டு நின்ற அவரது உதவியாளர்களிடம், நீங்களா எனக்குப் பதில் சொல்லப் போகிறீர்கள் எனக் கேட்டேன் எனக் கூறினார்.
ஆனால், அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை எனவும், சீன அதிபர் பதிலளிக்க அனுமதிக்கவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து துணை அதிபர் வான்ஸ் பக்கம் திரும்பிய டிரம்ப், நீங்களும் ஏன் சீன அதிபரின் உதவியாளர்கள் போல் நடந்து கொள்ள கூடாது என கிண்டலாகக் கேட்டது அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
















