பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.
அதன்படி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே பீகார் மாநில வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மூன்று மணி நிலவரப்படி 53 புள்ளி 77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















