கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் அனைவரும் கோயில்களில் நிறைந்திருந்த நிலையில், தெலங்கானாவில் மாந்திரீக பூஜைகள் நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாரங்கல் மாவட்டம், எல்லாண்டு கிராமத்தில் மாந்திரீகப் பூஜைகள் நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததை கிராம மக்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் இதுபோன்ற மாந்திரீக பூஜைகள் நடப்பது, இது இரண்டாவது முறை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து நிகழும் இத்தகைய சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், உடனடியாக இதில் காவல்துறை தலையிட்டு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
















